* எங்களோடு இணைக! படங்களையும் வண்ணமிடும் படைப்புகளையும் இன்றே சமர்ப்பித்திடுக *
Key Visual

பிரச்சாரம் பற்றிய அறிமுகம்

Consortium of Institutes on Family in the Asian Region (CIFA) நடத்தும் Family We-time Campaign 2025, Jockey Club SMART Family-Link திட்டம் மூலம் ஸ்பான்ஸர் செய்யப்படுகிறது, The Hong Kong Jockey Club Charities Trust மூலம் துவங்கப்பட்டு நிதியளிக்கப்படுகிறது.


இந்த ஆண்டின் பிரச்சாரத்தின் மூலம், படைப்பாற்றல் வழியாகக் குடும்பங்களை ஒன்றிணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். United Nations அறிவித்துள்ள முக்கியமான இரண்டு மெகா டிரெண்டுகளை மையமாகக் கொண்டு குடும்ப புகைப்படங்கள் அல்லது வண்ணமயமாக்கல் படைப்புகளை சமர்ப்பிக்க பங்கேற்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்: புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு (மற்ற இரண்டு காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள்).


இந்தப் பிரச்சாரம், மேற்கண்ட இரண்டு மெகா டிரெண்டுகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குடும்பங்களை, தங்களின் நல்வாழ்வை மேம்படுத்த, சவால்களை நேர்மறையாக எதிர்கொண்டு சமாளிக்கத் தூண்டும். கருப்பொருட்களில், புதிய தொழில்நுட்பங்களின் திறமையான பயன்பாடு, சமூக உள்ளடக்கம், சமூக வலைப்பின்னல்களின் கட்டமைப்பு ஆகியவை அடங்கும். Family We-time ஆன்லைன் படத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் கலைப்பூர்வப் கொலாஜாகக் காட்சிப்படுத்தப்படும். பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும், சமர்ப்பித்த பின் பாராட்டின் அறிகுறியாக ஒரு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

சமர்ப்பிப்புத் தகவல்

முக்கியத் தகவல்

தகுதி வரம்புகள்

  • 2 தலைமுறைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்
  • ஆசியாவில் உள்ள குடும்பங்கள் சேரலாம்
  • ஒவ்வொருவரும் 5 படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்

சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

  • 14 செப்டம்பர் 2025, ஞாயிறு

சமர்ப்பிக்கும் வகைகள்

  • குடும்ப புகைப்படங்கள் மற்றும் / அல்லது வண்ணமயமான கலைப்படைப்புகள்.

பதிவுக் கட்டணம்

  • கட்டணம் இல்லை

பங்கேற்கும் முறை

வண்ணம் தீட்டுவதற்கு:
  1. எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்ட வண்ணப்படத் தேர்வுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்க. பின்னர் அதை A4 அளவிலான (297 x 210 மிமீ) காகிதத்தில் அச்சிடுக.
  2. வண்ணம் தீட்டுவதற்காகக் கருவிகள் வண்ணப்பூச்சுகள் ஆகிய எதையும் பயன்படுத்தலாம். ஆனால் கணினி மூலமாக வண்ணமயமாக்கல் செய்வது, ஸ்டிக்கர்கள், மினுமினுப்பு பொருட்கள், க்ரீப் பேப்பர் போன்ற முப்பரிமாண பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.
  3. புதிய தொழில்நுட்பங்கள் அல்லது நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு என்ற கருப்பொருள்களை நன்கு வெளிப்படுத்தும் வகையில், வழங்கப்படும் வண்ணத் தாளில் உங்கள் சொந்த வடிவமைப்புகளைச் சேர்த்துப் படைப்பை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றலாம்.
புகைப்படம் எடுப்பதற்கு:
  1. சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் அசல் டிஜிட்டல் படங்களாக இருக்க வேண்டும். எந்தவொரு வகையான கணினி வழி எடிட்டிங், சேர்த்தல், நீக்கல் அல்லது வண்ண மாற்றங்கள் செய்யப்பட்ட படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  2. புகைப்படங்கள் புதிய தொழில்நுட்பங்கள் அல்லது நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு என்ற கருப்பொருளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்கள்:
  1. பதிவு செய்த பிறகு, JPEG, JPG அல்லது PNG வடிவில் உங்கள் அசல் டிஜிட்டல் புகைப்படங்கள் அல்லது வண்ணம் தீட்டப்பட்ட படைப்புகளை எங்கள் வலைத்தளத்தின் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
  2. மொத்தம் 5 படைப்புகள் வரை சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு படைப்பும் 10 MB அளவுக்கு மேல் இருக்ககூடாது.

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

  1. படைப்புகள் “Family We-time” ஆன்லைன் பதிவு போர்ட்டலின் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். JPEG, JPG, PNG கோப்புகளே ஏற்றுக்கொள்ளப்படும். ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, மாற்றவோ திருத்தவோ திரும்பப் பெறவோ முடியாது. மேலும், அந்தப் படைப்புகள் ஏற்கனவே வேறுபோட்டி அல்லது நிகழ்வு எதிலும் பங்கேற்றிருக்கக்கூடாது.
  2. சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் அசல் படைப்பாக இருக்க வேண்டும். மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் சொத்து, தனியுரிமை அல்லது ரகசிய உரிமைகளை மீறக்கூடாது. விதிகளை மீறுவோர் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
  3. சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் எதுவும் சட்டத்திற்குப் புறம்பாக இருந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் பங்கேற்பாளருக்கே ஏற்க வேண்டும். ஏற்பாட்டாளர் பொறுப்பேற்க மாட்டார்.
  4. பங்கேற்பாளர்கள் சமர்ப்பிக்கும் படைப்புகளில் ஆபாசம், வன்முறை, எதிர்மறையான செய்திகள், வணிக, மத, அரசியல் நோக்கங்கள் உள்ள பிரச்சாரக் கூறுகள் இருக்கக் கூடாது. மேலும் அவை, அவதூறு, அநாகரீகம், தாக்கக்கூடியதாக, இனம் சார்ந்த தவறான புரிதல் அல்லது பாகுபாட்டு மனப்பான்மையை வெளிப்படுத்தக்கூடாது என்பதையும் உறுதியாகக் கவனிக்க வேண்டும்.
  5. சமர்ப்பிக்கப்படும் படைப்புகளில், கையொப்பம், எல்லை வடிவங்கள், வாட்டர்மார்க் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் குறிக்கக்கூடிய எழுத்துகள், சின்னங்கள் அல்லது படங்களைச் சேர்க்க பங்கேற்பாளர்களுக்கு அனுமதி இல்லை.
  6. ஏற்பாட்டாளருக்கே சமர்ப்பிக்கப்படும் அனைத்து படைப்புகளின் பதிப்புரிமையும் உள்ளது. பங்கேற்பாளர்களிடம் முன் அனுமதி பெறாமலும், எந்தவொரு பதிப்புரிமைக் கட்டணமும் செலுத்தாமலும், சம்பந்தப்பட்ட படைப்புகளைத் திரையிடல், பிரச்சாரம் செய்தல், கண்காட்சி, அச்சிடல் போன்ற வணிகத்தோற்றமில்லா நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் முழு உரிமையும் ஏற்பாட்டாளருக்கு உள்ளது.
  7. நிகழ்வு தொடர்பாகத் தொடர்புகொள்ளப்படவும், ஏற்பாட்டாளரின் நிகழ்வுத் தகவல்களை பகிரவும் பங்கேற்பாளர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க ஒப்புக்கொள்கிறார்கள். நிகழ்வு முடிந்த பிறகு, அந்தத் தகவல்களை நீக்க ஏற்பாட்டாளரிடம் கோர வேண்டுமானால், பங்கேற்பாளர்கள் மின்னஞ்சல் மூலம் அதனை தெரிவிக்க வேண்டும்.
  8. படைப்பாற்றல் உள்ளடக்கிய தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளின் இறுதி முடிவுகள் ஏற்பாட்டாளரின் தீர்மானத்திற்கு உட்பட்டது மேலும் பங்கேற்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தல் கூடாது. ஏற்பாட்டாளர் மேற்கொள்ளும் தீர்மானமே இறுதியானதாகும்.
  9. பங்கேற்பாளர்கள் நிகழ்வின் அனைத்து விதிமுறைகளின் தெளிவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் படைப்புகளைச் சமர்ப்பிப்பது என்பது அவர்கள் இந்நிகழ்வின் விதிமுறைகளியும் நிபந்தனைகளையும் முழுமையாக ஏற்று, ஒப்புக்கொள்கிறார்கள் என்பதைக் குறிக்கும். பங்கேற்பாளர்களே தாங்கள் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து ஆபத்துகளுக்கும் முழுமையான பொறுப்பேற்பவர்களாக இருப்பர், மேலும் தங்களது சொந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவர்களின் கடமையாகும். நிகழ்வின் மூலமாகவோ, நிகழ்வின் போது அதனுடன் தொடர்புடையதாகவோ, வேறுவிதமாகவோ ஏற்படும் எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கும் ஏற்பாட்டாளர் பொறுப்பேற்க மாட்டார்.
  10. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் இறுதி விளக்கம் மற்றும் திருத்தத்திற்கான உரிமை ஏற்பாட்டாளருடையது.